Superstar Rajinikanth Club Press Release

rajnikanth-2-696x380

10 ஆண்டுகளாக தலைவரை சந்திக்க வேண்டி அனைத்து ரசிகர்மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் வைத்த வேண்டுகோளுக்கு இணங்கி ஏப்ரல் 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏற்பாடாகியிருந்தது. அதன்படி ஒவ்வொறு நாளும் 6 மாவட்ட நிர்வாகிகளுடன் ரசிகர்களை சந்திக்கவும் புகைப்படமெடுக்கவும் தீர்மானிக்கும் பட்சத்தில் சுமார் 1800 பேரை தனித்தனியே புகைப்படம் எடுப்பது நடைமுறையில் சாத்தியப்படாததால், 8 பேருக்கு ஒரு புகைப்படம் என்று திட்டமிட்டோம். ஆனால் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் உள்ள நிர்வாகிகள் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொள்வதைவிட தலைவருடன் தனித்தனியே புகைப்படம் எடுத்துக்கொள்வதில் தான் அவர்களுக்கு விருப்பமென்று தெரிவித்ததால், அவர்களுடைய விருப்பத்தில் இருக்கும் நியாயத்தை புரிந்து கொண்டு இப்போது நடத்தவிருந்த Photo shoot – ஐ தள்ளிவைத்து, தினம் ஒன்று அல்லது இரண்டு மாவட்ட நிர்வாகிகளுடன் ரசிகர்களை சந்தித்து தனித்தனியே புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமென்றும் அவர்களின் நியாயமான் கோரிக்கையை மதித்தும் தற்போது நடத்த விருந்த Photo Shoot -ஐ தள்ளிவைத்து, கால அவகாசத்திற்கு ஏற்றார் போல் பிறகு நடத்தாலமென்று முடிவு செய்திருக்கிறோம், நீங்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.




Rajinikanth Wishes to Vishal Team

unnamed (5)

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2017 – 2019-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகி களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் அதிகாரியாகப் பொறுப்பேற்று இந்தத் தேர்தலை நடத்தினார்.

விஷால் தலைமையில் போட்டியிட்ட ‘நம்ம அணி’ பெருவாரியாக வெற்றி பெற்றது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் வெற்றி பெற்றார். துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் ஆகியோர் பெற்றி பெற்றனர். கவுரவ செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா மற்றும் கதிரேசன் வெற்றி பெற்றனர். பொருளாளர் பதவிக்கு விஷால் அணியில் இருந்து போட்டியிட்ட எஸ்.ஆர்.பிரபு வெற்றி பெற்றார்.

புதிய நிர்வாகிகளின் பதிவேற்பு விழா சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவை ரோகிணி தொகுத்து வழங்கினார்.

முதலில் பேசிய எடிட்டர் மோகன் புதிய நிர்வாகிகளை மேடைக்கு அழைத்தார். அவர்களுக்கு ராஜ்கண்ணு, எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.டி.குஞ்சுமோகன், ராஜ்கிரண், தாணு, கேயார், ஏ.எல்.அழகப்பன், டி.சிவா ஆகியோர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.

ரஜினி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா, கதிரேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். தயாரிப்பாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அந்த கடவுள் உங்களுக்கு துணை புரிவார். என்னுடைய வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார் ரஜினி.

“உண்மையான நாயகன் விஷால். இந்த சினிமாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிற நாயகன். தயாரிப்பாளர் சங்கத்துக்கு மறுமலர்ச்சி ஏற்படக்கூடிய காலம் இது. ஒரே வருடத்தில் 2 அதிசயங்கள் நடைபெற்றுள்ளது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என இரண்டையுமே விஷால் அணி கைப்பற்றியுள்ளது.” என்று பேசினார் எடிட்டர் மோகன்.

ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய்: விவசாயிகளுக்கு நிதியுதவி – விஷால் நெகிழ்ச்சி
தமிழ்நாட்டில் திரையரங்கில் ஏதாவது ஒரு நாளில் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் எடுத்து விவசாயிகளுக்கு கொடுக்கவுள்ளோம் என்று விஷால் குறிப்பிட்டார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2017 – 2019-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகி களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் அதிகாரியாகப் பொறுப்பேற்று இந்தத் தேர்தலை நடத்தினார்.

விஷால் தலைமையில் போட்டியிட்ட ‘நம்ம அணி’ பெருவாரியாக வெற்றி பெற்றது. புதிய நிர்வாகிகளின் பதிவேற்பு விழா சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக விஷால் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ரஜினி பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்தார்.

தலைவராக பொறுப்பேற்றவுடன் விஷால் பேசியது, “இது ஒரு மிகப்பெரிய குடும்பம். அதனால் தான் அனைத்து சங்கங்களும் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். மாற்றம் வேண்டும் என்ற நம்பிக்கையால் நாங்கள் வந்துள்ளோம். தாணு சார், கேயார் சார், எஸ்.ஏ.சி சார் உட்பட அனைவரும் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. தமிழ் சினிமாவிற்கு பொற்காலம் பிறந்துவிட்டது.

யார் வந்தாலும் நல்லது செய்ய வேண்டும் என்று உழைக்கிறோம். இன்றைக்கு முதல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் என்ற முதலாளியை எப்படி காப்பாற்றுவது என்று பேசினோம். நலிந்த என்ற வார்த்தையே இருக்க கூடாது. எங்களுடைய அணி 24 மணி நேரம் உழைக்கப் போகிறது.

உறுப்பினர்களுக்கு பென்சன் தொகையை முதலில் செயல்படுத்தவுள்ளோம். விவசாயிகள் பிரச்சினைக்கு ஏதாவது உதவ வேண்டும் என்று பேசினோம். தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, தமிழ்நாட்டில் திரையரங்கில் ஏதாவது ஒரு நாளில் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் எடுத்து கொடுக்கவுள்ளோம். அது எத்தனை கோடி வரும் என எனக்கு தெரியாது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதில் வரும் மொத்த தொகையையும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும்.

அனைத்து சங்கங்களும் இணைந்தால் இன்னும் விவசாயிகளுக்கு நிறைய நல்லது செய்யலாம். தலைப்பு, சென்சார், வரிச்சலுக்கை உள்ளிட்ட அனைத்து விஷயங்களும், அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பொதுவானதாக செயல்படும். திருட்டு விசிடிக்கு எதிராக ஒரு நல்ல விஷயம் நடைபெறவுள்ளது. அது குறித்த முறையான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த ஒற்றுமையை வைத்து நிறைய விஷயம் செய்யலாம். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. உங்களுக்காக உழைப்பேன். நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து ஒரு பிரம்மாண்டமான விருது விழா நடத்தவுள்ளோம். இந்தாண்டே அவ்விழா நடத்தி 10 கோடி வரை தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டுவோம்.
ஒட்டு மொத்த இந்திய திரையுலகம் ஒன்றிணைந்து இளையராஜா சார் நிகழ்ச்சிக்கு ‘இசைவோம்’ என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தவுள்ளோம். இவ்விரண்டு நிகழ்ச்சிகள் மூலமாக சுமார் 15 கோடி வரை இந்தாண்டுக்குள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டுவோம்.

அனைத்து சங்கங்கள் இணைந்து செயல்பட்டால் ஆகஸ்ட் மாதத்துக்குள் திருட்டு விசிடி இருக்காது. படம் செய்ய எண்ணம் உள்ள தயாரிப்பாளர் அனைவருக்கும் படம் பூஜைப் போடப்பட்டதிலிருந்து படம் வெளியாகும் வரை என்ன பிரச்சினை என்றாலும் உடன் இருப்போம்.

மானியம் தொடர்பாக பேச தமிழக முதலமைச்சரிடம் நேரம் கேட்போம். 10 ஆண்டுகளாக மானியம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவர் நேரம் கொடுக்கும் போது நேரில் பேசி வலியுறுத்திவோம்.

விஷால் என்பவர் ஏன் போட்டியில் நிற்கவேண்டும். ஏன் 2 பதவிக்கு எனக் கேட்டார்கள். நானும் நிறைய தயாரிப்பாளரிடம் போய் தலைவருக்கு நில்லுங்கள் என்று கேட்டேன். ஆனால், இறுதியில் நானே நிற்கவேண்டிய சூழல் வந்துவிட்டது. உங்கள் அனைவருக்கும்…. ” என்று கூறிவிட்டு மேடையில் முட்டிப் போட்டு வணங்கிவிட்டு “சத்தியமாக நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று வந்தேன்” என்று கண்கலங்கி தெரிவித்தார்.

A Request to Superstar Rajinikanth and Ulaga Nayagan Kamal Hassan

unnamed (10)

அன்புக்கும் மரியாதைக்குமுரிய தமிழ்சினிமாவின் அசைக்கமுடியாத அரசனாக நாங்கள் முடிசூட்டி வைத்திருக்கும் அய்யா சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு பணிவார்ந்த வணக்கங்கள்…

நான் சுரேஷ் காமாட்சி. தமிழ் சினிமாவின் ஒரு சிறு தயாரிப்பாளர். உங்களை ஆச்சரியமாகப் பார்க்கும் கோடிக்கணக்கானவர்களில் கடைக்கோடியன். உங்களுக்கு எதையும் அறிவுறுத்தவோ வலியுறுத்தவோ தகுதியற்றவன்.

ஆனாலும் என்னைப் போன்றவர்களின் பரவலான ஆதங்கம் உங்களைச் சென்றடைய வேண்டுமே என்ற நோக்கத்திலும், சென்று சேரும் என்ற நம்பிக்கையிலும் எழுதுகிறேன்.

அய்யா, தாங்கள் பல நேரங்களில் நீங்கள் செயல்படும் விதத்தில் நேர்மையானவராகவும், மக்களின் உணர்வுகளை சீராய்ந்து மதிப்பவராகவும் நடந்துவந்திருக்கிறீர்கள்.

மக்களை எந்தவிதத்திலும் உங்கள் புகழின் மூலமும் ஆளுமையின் மூலமும் பாதிக்கப்பட்டவர்களாக்க துணிந்ததேயில்லை.

சின்னச் சின்ன முன்னெடுப்புகளை மேற்கொள்கையில், அது அவர்களைப் பாதிக்கும் என அறிந்தால் அதிலிருந்து விலகி நின்றிருக்கிறீர்கள்.

சமீபத்தில்கூட இலங்கை செல்வது குறித்து ஒருசிலர் எதிர்க்கருத்து கொண்டுவந்தபோது நீங்கள் நான் தவிர்த்துவிடுகிறேன் என ஒரு அழகான அறிக்கையின் மூலம் உங்கள் மேன்மைக்குரிய குணத்தை நிரூபித்திருந்தீர்கள்.

அவர்கள் கேட்டுக்கொண்டது சரி தவறு என்ற விவாதத்திற்குள் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. நான் போவேன் என்றுகூட நீங்கள் முடிவெடுத்திருக்கலாம். ஆனால் யாரையும் புண்படுத்திவிடக்கூடாது என்ற மனப்பாங்கில் வேண்டுகோள் விடுத்தவர்களின் கோரிக்கையை புறந்தள்ளாமல் பயணத்தை ரத்து செய்தீர்கள்.

அந்த முடிவு உங்களுக்கு எவ்வளவு பெரிய சிரமத்தைக்கொடுத்திருக்கும் என்பதை எங்களால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

அதற்காக முதலில் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். நன்றி அய்யா!

இப்போதும் நாங்கள் தயாரிப்பாளர்கள் இதேபோலொரு இக்கட்டான சூழலில் தள்ளப்பட்டிருக்கிறோம். அதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவரவேண்டியது அவசியமானதும் கடமையும் கூட.

நடிகர் விஷால் தனது சுயநலத்திற்காக உங்களைப் பயன்படுத்திக்கொள்ள துணிந்திருக்கிறார்.

அய்யா அவர்மீது ஏழை எளிய நாடகநடிகர்கள் உட்பட அனைத்து நடிகர்களும் பெரும் நம்பிக்கை வைத்து ஓட்டளித்து அவரை நடிகர் சங்கச் செயலாளராக வெற்றிபெற வைத்தனர்.

ஆனால் இரண்டு வருட பதவிக்காலத்தில் என்னென்னவோ நிறைவேற்றுவோம் என அதிகபட்ச வாக்குறுதிகளைக் கொடுத்து பதவிக்கு வந்தார். கூடவே ஒரு வருடத்திற்குள் நாங்கள் சொன்னதைச் செய்யாவிட்டால் பதவி விலகுவோம் என்ற பெரு நம்பிக்கையை எல்லா நடிகர்களுக்குள்ளும் விதைத்துத்தான் ஓட்டு வாங்கினார்.

செய்ததென்னவோ ஆட்சி மாற்றத்திற்கான விளம்பரத்தில் கிரிக்கெட் ஆடி பணம் பெற்றதோடு அவர் சேவை நின்றுபோனது. அதன்பிறகு செய்ததெல்லாம் பத்திரிகை தொலைக்காட்சிகளில் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரப் புகழைத் தேடிக்கொண்டதோடு சரி.

ஊர் ஊராகச் சென்று நாடக நடிகர்களின் வாழ்வில் விளக்கேற்றுவேன் என்று சொன்ன வாக்குறுதியை பின் மறந்தே போய்விட்டார்.

வசதியாக, ஒருவருடத்திற்குள் ராஜினாமா செய்வோம் என்பதையும் மறந்துவிட்டார். தவிர நீங்கள் வைத்த தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கம் என்ற கோரிக்கையை அவரும் அவரது சகாக்களும் நிராகரித்து காற்றில் பறக்கவிட்டு விட்டனர்.

இதெல்லாம் நடிகர் சங்க விவகாரம். இதில் தயாரிப்பாளர்களுக்கென்ன பிரச்சனை என்றால் நடிகர் சங்கப் பதவியிலிருக்கும்போதே இன்னொரு தாய் சங்கமான தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடுவதா என்று கேட்டால், அதுவும் இல்லை. அதுதான் போட்டியிடலாம் என்று நடிகர் சங்க விதியும், தயாரிப்பாளர் சங்க விதியும், நீதிமன்றத்தின் சட்டமும் சொல்லிவிட்டதே..

நாங்களும் அதை ஏற்று போட்டியிடத் தயாராகிவிட்டோமே.

ஆனால் அவர் இப்போது தேர்ந்த அரசியல்வாதியைப் போல நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவை கையிலெடுத்து அதற்கு உங்களை இழுத்து விளம்பரம் தேடி ஓட்டுக்களை பெறலாம் என்று கணக்குப் போட்டு வேலை செய்கிறார்.

அதற்கு உங்களை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். இந்த அடிக்கல் நாட்டுவிழாவை செய்யத் தகுதியானவர் நீங்கள்தான் என்ற மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்கப் போவதில்லை.

என்னுடைய வேண்டுகோளெல்லாம் நீங்கள் விஷாலின் பதவி ஆசைக்கும் தவறான முன்னெடுப்புக்கும் துணைபோகவேண்டாம் என்ற ஒன்றே ஒன்றுதான்.

அதற்கு துணைபோகவேண்டாம் எனச்சொல்ல மிக முக்கியமான காரணம் இந்தக் கட்டிடத்திற்கு சென்னை மாநகராட்சி இன்னும் முறைப்படியான அனுமதி கொடுக்கவில்லையென்பதுதான். முறையான அனுமதி பெறாமல் அடிக்கல் நாட்ட நடத்தப்படும் இந்த விழாவில் நீங்கள் கலந்துகொண்டு உங்கள் மீது ஒரு சிறு கரும்புள்ளி விழ விட வேண்டாம் என்பது என் வேண்டுகோளும் என் போன்ற சிறு தயாரிப்பாளர்களின் வேண்டுகோளும் ஆகும்.

நான் சொல்வது தவறென்றால் தயவுசெய்து தாங்கள் நினைத்தால் இதன் உண்மைத்தன்மையை அறிய ஒரு நிமிடமே பிடிக்கும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

விதிகளுக்குட்பட்டு நடக்கும் எங்கள் சூப்பர் ஸ்டார் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது.

நடிகர் சங்க கட்டிடம் கட்டவில்லை. எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. ஆனால் அதற்குள் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டி ஏன் என்று நாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நடத்தப்படும் இந்த கண்துடைப்பு விழாவை தாங்கள் தயவுசெய்து அனுமதியாதீர்கள்.

அரசியல் தேர்தல் விதிகளில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் எந்த நலத்திட்டங்களோ பொதுப் பயன்களையோ போட்டியாளர் அறிவிக்கவே கூடாது என்ற விதி ஏன் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தாங்கள் அறியாததல்ல.

இருந்தும் இங்கு தேர்தல் ஆணையமும் கிடையாது. அதைப்போன்ற நெறிமுறையும் வகுக்கப்படவில்லை என்பது விஷாலுக்கு சாதகமாக உள்ளது.

அதைப் பயன்படுத்தி முழுக்க முழுக்க தயாரிப்பாளர் சங்கத் தேர்தலைக் குறிவைத்து தனது அவசரகோலத்தை அரங்கேற்றத் துடிக்கிறார். அதற்கு வலு சேர்க்கவே உங்களை அழைத்துள்ளனர்.

இது உங்களைப் பயன்படுத்தும் சதிச்செயலே அன்றி வேறொன்றுமில்லை.

நீங்கள் எதையும் பகுத்தறியும் தன்மைகொண்டவர். பக்திமான். மக்களின் மதிப்பிற்குரிய பெருமகன்.

நீங்கள் இதை ஆராய்ந்து தகுதியான முடிவெடுத்து இந்த விழாவில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டுமாய் அனைத்து தயாரிப்பாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இவ்விழா பின்னொரு நாளில் நடிகர் சங்கக் கட்டிடத்திற்கான மாநகராட்சியின் முறையான அனுமதி பெற்று இந்த நிகழ்வு அரங்கேற வேண்டும் என்பதைத் தாங்கள் வலியுறுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

முந்தின நாள் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டு நாளை மறுநாள் நடத்தப்பட வேண்டிய விழாவா இது அய்யா?

அத்தனை நாடக நடிகர்கள் ஏழை எளிய நடிகர்கள் உட்பட பெருவாரியான நடிகர்கள் கலந்துகொள்ள திருவிழாவாக நடத்தப்பட வேண்டிய விழா அல்லவா இது?

அய்யா சங்கரதாஸ் சுவாமிகள், அய்யா நடிகவேள், அய்யா சிவாஜி, அய்யா எம்ஜிஆர் போன்ற பெருமகனார்களின் நிறைந்த ஆசிர்வாதம் இதன்மூலம் கிடைக்குமா அய்யா சொல்லுங்கள்..?

நான் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் யாராவது ஒருத்தர் ஏன் குறுக்கே வருகிறீர்கள் என்ற எண்ணத்தைப் புறந்தள்ளிவிட்டு இந்த ஒரு விழாவை சரியாக நடத்த வேண்டும் என்ற பெருநோக்கத்தை உங்கள் முடிவினிலும் ஆலோசனையாலும் முறைப்படுத்துவீர்கள் என்ற நம்புகிறேன்,

அதோடு, தயாரிப்பாளர்கள் சங்கத்தை ரெகுலரான தயாரிப்பாளர்களே நிர்வகிக்க நீங்கள் அனுமதியளிப்பீர்கள் என்ற உண்மையான எதிர்பார்ப்புடனும், எளியவன் சொல்லும் அம்பலத்திலேறும் என்பதை நீங்கள் உறுதி செய்வீர்கள் என்ற பேராவலோடும் இக்கடிதத்தை நிறைவு செய்கிறேன்.

மதிப்புக்குரிய கலைஞானி, உலக நாயகன் கமல் ஹாஸன் அவர்களுக்கு…

வணக்கம்.

தங்களின் பரம ரசிகர்களுள் ஒருவன், பரமக்குடிகாரன் சுரேஷ் காமாட்சி பணிவுடன் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன்.

நடிகர் சங்க கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா என்ற பெயரில் நடிகர் விஷால் நடத்தவிருக்கும் மோசடிக்கு மட்டும் எக்காரணம் கொண்டும் பலியாகிவிடாதீர்கள்.

காரணம் மாநகராட்சியின் அனுமதியின்றி, வெறும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை மட்டுமே மனதில் கொண்டு, தேர்தலுக்கு 2 நாட்கள் இருக்கும்போது அந்த நிகழ்ச்சியை நடத்துகிறார் விஷால்.

உங்களைப் போன்ற பெருங்கலைஞர்களின் ஆசியோடும் ஆதரவோடும் பதவிக்கு வந்து, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சும்மாவே காலத்தைப் போக்கிய விஷால் அன்ட் கோ, இப்போது திடீரென்று கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுவதாகக் கூறுகிறார்கள்.

ஒரு சாதாரண நடிகர் சங்கத் தேர்தலை ஏதோ மாநிலத்துக்கான சட்டமன்ற தேர்தல் அளவுக்கு பரபரப்பாக்கிய விஷால், அதில் குறைந்த வாக்குகளில் ஜெயித்தார். இப்படி ஜெயிப்பதற்காக அவர் ஏழை நாடக நடிகர்களிடமெல்லாம் என்னென்னமோ வாக்குறுதிகள் தந்தார். ஆனால் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மஞ்சப் பைகள் தந்ததைத் தவிர.

நட்சத்திர கிரிக்கெட் ஆடி பணத்தை வசூலித்ததோடு கடமை முடிந்துவிட்டதாக, கருவேல மரங்களை அகற்றுவதாகக் கூறி ஒரு விளம்பரம். அப்படியே உங்கள் பேச்சையும் மீறி, மாணவர்களின் ஜல்லிக்கட்டுப் போராட்ட பெருமையைக் களவாட முயன்று அவமானப்பட்டார். அடுத்து நம்ம அணியுடன் டெல்லிக்குப் போய், மத்திய அமைச்சரை ஒப்புக்கு, கெஞ்சி கூத்தாடி சந்தித்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு பப்ளிசிட்டி தேடுகிறார்.

நடிகர் சங்க கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, முன்னாள் முதல்வர் தலைமையில் நடக்கவிருந்தது. அத்தனை பிரமாண்டமான நடத்தவிருந்த விழாவை இப்போது அவசர கோலத்தில் நடத்துவது ஏன்? அதில் உங்களையும் சூப்பர் ஸ்டார் அவர்களையும் கோர்த்துவிடுவது ஏன்?

ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியின் நரித்தனம்தான் இதில் தெரிகிறது. உள்ளூர் அரசியல் தொடங்கி உலக அரசியல் வரை ஒரு தெளிவான பார்வை கொண்ட உலக நாயகனான உங்களுக்கு இந்த திரையுலக அரசியல் தெரியாமலிருக்க நியாயமில்லை.

எனவே தாங்கள் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு, விஷாலின் மோசடிக்கு ஒரு அங்கீகாரம் தந்து விடாதீர்கள் என தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன்.

Rajinikanth Praised Motta Shiva Ketta Shiva Team

unnamed (1)

ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கிகல்ராணி, கோவைசரளா ஆகியோரது நடிப்பில், இயக்குனர் சாய்ரமணி இயக்கத்தில், அம்ரிஷ் இசையமைத்து சுப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் உருவான மொட்ட சிவா கெட்ட சிவா படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படம் வெளியான மறுநாளே படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படத்தை வெகுவாக பாராட்டினார். இதுவரை லாரன்ஸின் நடிப்பையும், நடனத்தையும் பாராட்டி வந்த சூப்பர் ஸ்டார் அவர்கள் இந்த படத்தில் ஸ்டன்ட் பற்றியும் ஸ்டைல் பற்றியும் மிகவும் பாராட்டினார். மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி மற்றும் இசையமைப்பாளர் அம்ரிஷ் என படத்தின் குழு அனைவரையும் பாராட்டினார்.
அதை பற்றி இயக்குனர் சாய்ரமணி கூறியதாவது.

சூப்பர் ஸ்டாரின் ரசிகனான எனக்கு, சூப்பர் ஸ்டாரின் ரசிகரை வைத்து படம் இயக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தேன். தெரியலாம் நடந்த மக்கள் சூப்பர் ஸ்டார் டைட்டில் பிரச்சனையால் மிகவும் நான் கவலைப் பட்டிருந்தேன். இந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு எங்களை அழைத்தார்.. அப்பொழுது அவரிடம் நான் லாரன்ஸ் மாஸ்டருடன் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து பழகி வந்த எனக்கு அவரின் மேல் உள்ள அன்பின் அடிப்படையிலும், மக்களுக்கு உதவி செய்துவரும் அவர். மேலும் தொடர்ந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் எனும் நல்ல எண்ணத்தின் அடிப்படையிலும் தான் அந்த டைட்டிலை வைத்தேன். ஆனால் அது சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் மனதை புண் படுத்திவிட்டது. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தப்போது சில திரையரங்குளில் மக்கள் சூப்பர் ஸ்டார் கார்டு எடுக்கப் பட்டுவிட்டது. மற்ற திரையரங்குகளிலும் எடுத்து கொண்டே வருகிறோம். என்று எனது விளக்கத்தை அவரிடம் தெரிவித்தேன் . சூப்பர் ஸ்டார் அவர்கள் என்னையும் எனது படத்தையும் மனதார பாராட்டியதும் எனது அடுத்த படத்திற்கும் வாழ்த்து தெரிவித்ததும் எனது வாழ் நாளில் மறக்கவே முடியாத ஒன்று என்று இயக்குனர் சாய்ரமணி மனம் நெகிழ்ந்து தெரிவித்தார்.