Odi Odi Ulaikkanum Movie Press Release

Odi Odi Ulaikkanum Movie Stills (4)

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தொடர்ந்து பிரபு தேவா நடிக்கும் “ எங்க மங் சங் “ படத்தையும் தயாரித்து வருகிறார்கள். தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாயகியாக அமேரா தஸ்தூர் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, மன்சூரலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், பாலாஜி பாஸ்கி, யோகிபாபு, மதுசூதனன் ராவ், மயில்சாமி, பஞ்சுசுப்பு, ராதாமணி இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – கோபிநாத்
இசை – ஜிப்ரான்
கதை – ஞானகிரி
கலை – வனராஜா
ஸ்டன்ட் – சில்வா
எடிட்டிங் – ராமாராவ்
நடனம் – அசோக்ராஜா
தயாரிப்பு நிர்வாகம் – மகேஷ்
தயாரிப்பு மேற்பார்வை – பாலகோபி
மக்கள் தொடர்பு – மௌனம்ரவி
தயாரிப்பு – கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்
திரைக்கதை, வசனம், இயக்கம் – கே.எஸ்.மணிகண்டன்.

ஓடி ஓடி உழைக்கணும் படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. சமீபத்தில் அமேரா தஸ்தூர் ஜாலியாக ஆடி பாடிய பாடல் காட்சி ஒன்று சென்னை செம்மொழிப் பூங்காவில் அசோக்ராஜா நடன அமைப்பில் படமாக்கப்பட்டது. அவர் ஜாலியாக ஆடிப்பாடும் அழகை சந்தானம் மெய்மறந்து ரசித்த காட்சியையும் படமாக்கினர். ஜாலியான ஒரு கதையை படமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார் கண்ணா லட்டு தின்ன ஆசையா வெற்றி பட இயக்குனர் கே.எஸ்.மணிகண்டன் .
Young Mung Chung Movie Press Release

YMS (14)

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதை தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது….இதை தொடர்ந்து பிரபுதேவா நாயகனாக நடிக்கும்
“ எங் மங் சங் “ படத்தையும் தயாரிக்கிறார்கள். தேவி வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது.. கதாநாயகியாக லஷ்மிமேனன் நடிக்கிறார்.மற்றும் தங்கர்பச்சான், சித்ராலட்சுமணன், கே.ராஜன், R.j. பாலாஜி,பாகுபலி பிரபாகர் ( கலக்கேயா), கும்கி அஸ்வின், நாகேந்திரபிரசாத், முனீஸ்காந்த், காளி வெங்கட், மாரிமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஆர்.பி.குருதேவ் ( இவர் காஞ்சனா 2, யோகி போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர்.
இசை – அம்ரீஷ்
பாடல்கள் – பிரபுதேவா, மு.ரவிகுமார்
எடிட்டிங் – நிரஞ்சன், பாசில்
கலை – ராஜன்.D
தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.பி.பாலகோபி
தயாரிப்பு – கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்,
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.எஸ்.அர்ஜுன்.

நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா ஆரம்ப காலத்தில் டான்ஸ் மாஸ்டராக கொடி கட்டியவர். அதற்கு பிறகு நடிகராகவும், இயக்குனராகவும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்.

டான்ஸ் மாஸ்டரான பிரபுதேவா, ஸ்டன்ட் மாஸ்டராக அதாவது குங்பூ சண்டை பயிற்சியாளராக நடிக்கும் படம் “ எங் மங் சங் “ முழுக்க முழுக்க காமெடி கலக்கல் படமான “ எங் மங் சங் “ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Shruthihassan Latest Press Release

unnamed (1)

சர்வதேச அளவில் புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் வரலாற்று படமான சங்கமித்ரா திரைப்படத்தின் அறிமுகம் நிகழ்வது குறித்து அதன் நாயகி ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சர்வதேச ரசிகர்களை கவரும் கதைக்களம் கொண்ட சங்கமித்ரா படம் கான்ஸ் பட விழாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்தும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர்.சி தனது அடுத்த படமான சங்கமித்ராவை பிரம்மாண்டமான முறையில் உருவாக்குகிறார். 8 ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையை விவரிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா நாயகர்களாக நடிக்கின்றனர். வீரமும், தீரமும் நிறைந்த வீர மங்கையாக நாயகி ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.

இந்த படத்தில் வால்வீச்சில் வல்லமை கொண்ட வீரமங்கை பாத்திரத்தில் நடிப்பதற்காக லண்டனில் ஸ்ருதி ஹாசன் விஷேச பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

தேனாண்டாள் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படம் அதன் வரலாற்று கதைக்களத்திற்காக ஏற்கனவே கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், வரும் 18 ம் தேதி நடைபெறும் சர்வதேச அளவில் புகழ் பெற்ற 70 வது கான்ஸ் திரைப்பட விழாவின் துவக்க நாளில், சங்கமித்ரா திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் இயக்குனர் சுந்தர்.சி, நாயர்கள் ஜெயம் ரவி, ஆர்யா, நாயகி ஸ்ருதி ஹாசன், தயாரிப்பாளர்கள் நாரயணன் ராம்சாமி, ஹேமா ருக்மணி, புரெடக்‌ஷன் டிசைனர் சாபு சிரில் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கான்ஸ் திரைப்பட விழா மூலம் சங்கமித்ரா படத்தை சர்வதேச ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்வது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். படத்தின் கதை தேசிய மற்றும் சர்வதேச ரசிகர்களை ஈர்க்க கூடியது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், படத்தின் துவக்கத்தில் சர்வதேச ரசகர்களின் பங்கேற்பை பெறுவது உற்சாகமானது என்றும் ஸ்ருதி ஹாசன் தெரிவித்தார்.

Yaar Ivan Press Release

unnamed (2)

“யார் இவன்” ஒரு காதல் கதை கலந்த மர்ம த்ரில்லர் திரைப்படம். சச்சின் நாயகனாகவும் ஈஷா குப்தா நாயகியாகவும் நடிக்கின்றனர். பிரபு, சதீஷ், வென்னெலா கிஷோர், கிஷோர் குமார் உள்ளிட்டவர்களும் படத்தில் உள்ளனர். பீமிலி கபடி ஜட்டு, எஸ்.எம்.எஸ், ஷங்கரா ஆகிய தெலுங்கு படங்களை இயக்கி பெரும் வெற்றியை கண்ட T.சத்யா இயக்கும் முதல் தமிழ் படம் “யார் இவன்”.

இன்று இப்படத்தில் இடம் பெறும் ஏனோ ஏனோ பாடலின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் சுவாரசியமான ஆக்‌ஷன் த்ரில்லர் படமான “யார் இவன்” வரும் ஜீன் மாதம் உலகேங்கும் வெளியாகவுள்ளது

நடிகர்கள்:

Sachiin
Esha Guptha
Prabhu
Kishore Kumar
Sathish
Vennela Kishore
Dhanya Balakrishnan
Supreeth Reddy
Sathru
Delhi Ganesh
Haris

தொழில்நுட்ப கலைஞர்கள்:

Director – T Sathya
Producer – Raina Joshi
Music – SS Thaman
Lyrics – Na Muthu Kumar
Cinematography – Binendra Menon
Editor – Prawin Pudi
Fights – Kanal Kannan
Executive producer – Sivaprasad Gudimitla
PRO – Nikkil
Publicity Designs – Venkat

Maatukaravelan Movie Press Release

Maatukaravelan Movie Stills (3)

46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறது புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் ஜோடியாக நடித்து வெள்ளி விழா கண்ட ஜனரஞ்சக திரைக்காவியம், மாட்டுக்கார வேலன்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்த படம் என்ற பெருமையையும், கவியரசர் கண்ணதாசன் மற்றும் வாலிபக்கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த தித்திக்கும் பாடல்களையும் கொண்ட காவியத் திரைப்படம் என்ற பெருமையையும் ஒரு சேர பெற்ற படம், “மாட்டுக்கார வேலன்”.

ப. நீலகண்டன் இயக்கத்தில் 1970-ல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், வி.கே.ராமசாமி, சோ மற்றும் பலர் நடித்த மாட்டுக்கார வேலன் திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் ‘திரை இசைத் திலகம்’ கே.வி.மகாதேவன்.

கிட்டத்தட்ட 46 வருடங்களுக்குப் பின் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டு, மெருகேற்றப்பட்ட வண்ணக்கலவையில், 5.1 ஒலி அமைப்பில், சினிமாஸ்கோப் திரைப்படமாக தயாராகிக் கொண்டிருக்கிறது.

1970ம் வருடத்திலேயே சினிமாஸ்கோப் தொழில்நுட்பத்துடன் உருவாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து சென்னையில் மட்டும் அரங்கம் நிறைந்த 400 காட்சிகள் என்ற வரலாறு படைத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆன, மாட்டுக்கார வேலன், இன்னும் மெருகூட்டப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது.

தங்கத்தினால் கலசம் வைத்த கோபுரம்
நான் தழுவும் போது குலுங்கும் இசை ஆயிரம்
காதலென்னும் தேனிருக்கும் பாத்திரம்
அது காலம் தோறும் நான் குடிக்க மாத்திரம்
இருவருக்கும் இன்பம் என்னும் சாத்திரம்
காலம் இன்னும் உண்டு.
அதற்குள் என்ன ஆத்திரம்?

என்ற தேன் சிந்தும் கவியரசரின் வரிகளோடு அமைந்த “தொட்டுக்கொள்ளவா, நெஞ்சில் தொடுத்துக்கொள்ளவா” பாடலும், “ஒரு பக்கம் பாக்குறா” பாடலும், “வாலிபக்கவிஞர்” வாலி வரிகளில் அமைந்த “பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா” ஆகிய இனிமையான காதல் சொட்டும் பாடலும் அமைந்த அற்புதத் திரைக்காவியம். “சத்தியம் நீயே தர்ம தாயே” பாடலும், “பட்டிக்காடா பட்டணமா” ஆகிய தத்துவப் பாடல்களும் இடம் பெற்றுள்ள திரைப்படம்.

எம்.ஜி.ஆர் படங்கள் என்றாலே கமர்சியலுக்கும் குறைவிருக்காது, காதலுக்கும் குறைவிருக்காது. அப்படி, காதலென்னும் தேன் இருக்கும் பாத்திரம் ஆக அமைந்த படங்களில் ஒன்றான மாட்டுக்கார வேலன் மீண்டும் டிஜிட்டலில் வெளியாகும் செய்தி, நிச்சயமாக எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும், சினிமா காதலர்களுக்கும் கொண்டாட்டமான குதூகலமான செய்தியாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.
ஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் என்.கனகசபை தயாரிப்பில் உருவான மாட்டுக்கார வேலன் டிஜிட்டல் பதிப்பை சாய் வெங்கட் ராமா பிலிம்ஸ் சார்பில் சுனிதா வெளியிடுகிறார்.

Saravanan Irukka Bayamaen Press Release

unnamed (1)

ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, சூரி நடிப்பில் எழில் இயக்கியிருக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. ஏற்கனவே டி.இமான் இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. மே 12ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

எல்லா படங்களையும் நான் திரையரங்கில் தான் பார்க்கிறேன். படம் நன்றாக இருந்தால் பத்து தடவை வரை பார்ப்பேன். மற்றவர்களை பார்க்க பரிந்துரை செய்வேன். நல்லா இல்லைனா திட்டிக் கொண்டே வருவேன். தியேட்டர் டிக்கட், கேண்டீன் விலை எல்லாம் குறைத்தால் நிறைய மக்கள் படம் பார்க்க வருவார்கள். நான் நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறேன், அதனாலேயே பார்த்த உடனே நடிப்பில் யார் தேறுவார்கள் என சொல்லி விடுவேன். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் படங்கள் பார்த்திருக்கிறேன், அவர் பெரிய ஹீரோவாக நிச்சயம் வருவார். ரெஜினா கஸாண்ட்ரா சிறந்த நடிகை. அவர் தமிழ் சினிமாவின் ஜூலியா ராபர்ட்ஸ் என கலகலப்பாக பேசி விட்டு போனார் நடிகர் லிவிங்ஸ்டன்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் கிடைத்த அளவுக்கு இந்த படத்தில் எனக்கு தீனி இல்லை. ஒரிரண்டு சீன்கள் தான் என்றாலும் எழில் படம் என்பதால் மட்டுமே நடித்தேன். வசந்தபாலன் எனக்கு கடவுள், இயக்குனராக இருந்த என்னை நடிகராக்கியவர். எனக்கு காமெடியும் வரும் என்பதை எனக்கு உணர்த்தியவர் என் அண்ணன் இயக்குனர் எழில். அதனால் தான் ஒரு சீன் என்றாலும் நான் நடிக்கிறேன். உதயநிதி ஸ்டாலின் பெரிய குடும்பத்தின் வாரிசு என்றாலும் எல்லோரிடமும் சகஜமாக பழகக் கூடியவர். நல்ல மனிதர் என்றார் நடிகர் ரவி மரியா.

பல முக்கியமான நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கும் போது மானிட்டரில் மிகவும் அமைதியாக அமர்ந்திப்பார் இயக்குனர் எழில். அவர் பொறுமைசாலி மட்டும் இல்லை, புத்திசாலி. எடிட்டிங் தெரிந்த் ஒரு இயக்குனர். அது தான் இயக்குனர் எழிலின் வெற்றிக்கான முக்கிய காரணம். நல்ல இயக்குனர்கள் இங்கு அதிகமாக இல்லை. எழில் மாதிரி குறைந்தபட்சம் 10 இயக்குனர்கள் தற்போதைய தமிழ் சினிமாவுக்கு தேவை. உதயநிதி ஸ்டாலினை இரண்டு முறை பார்த்து பேசியிருக்கிறேன். யாருக்கு தெரியும் தமிழ் நாட்டின் வருங்கால முதலமைச்சருடன் கூட நான் பேசியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்றார் இயக்குனரும், நடிகருமான ஜி.எம்.குமார்.

இது தான் கதையா? என்ற ரீதியில் ஒரு மெல்லிய கதையை சொல்லுவார் இயக்குனர் எழில். ஆனால் படமாக பார்க்கும் போது மிகவும் பிரமாதமான படமாக எடுத்து வைத்திருப்பார். அப்படி நான் நினைத்த நான்கு படங்களும் சூப்பர் ஹிட். அந்த மாதிரி இந்த படமும் பெரிய வெற்றி பெறும். என் கைபேசியை எடுத்து பார்த்தால் என் மனைவியை விட யுகபாரதியின் மொபைல் நம்பருக்கு தான் அதிகம் பேசியிருப்பேன். அவருடன் தான் அதிக பாடல்கள் பணியாற்றியுள்ளேன், அது ஒரு நல்ல அனுபவம் என்றார் இசையமைப்பாளர் டி.இமான்.

10 வருடங்களுக்கு முன்பு தமிழ் படங்களுக்கு வரிவலக்கு சட்டத்தை கொண்டு வந்த கலைஞருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாகுபலி மாதிரி படங்கள் ஏன் தமிழில் எடுக்கப்படுவதில்லை என ஆதங்கமாக இருக்கிறது. நாட்டில் விவசாயிகளின் பிரச்சினையை பிரதமர் மோடி கண்டு கொள்ளவில்லை. ஆனால் சத்குரு விழாவில் கலந்து கொள்கிறார். முடியும்போது ஒலிக்க வேண்டிய தேசிய கீதத்தை திரையரங்குகளில் படம் ஆரம்பிக்கும் முன்னரே போடுகிறார்கள். அதுவும் தமிழ்நாட்டில் தமிழில் கூட தேசிய கீதத்திற்கு அறிவிப்பு இல்லை. இதை எந்த ஒரு மாநில கட்சியும் கண்டு கொள்ளவில்லை என்று பாய்ச்சலாக பேசி விட்டு போனார் மன்சூர் அலிகான்.

இதுநாள் வரை பரோட்டா சூரியாக எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்திருந்தார் சுசீந்திரன். அதை உடைத்து எனக்கு புஷ்பா புருஷன் என்ற புதிய அடையாளத்தை கொடுத்தவர் சுசீந்திரனின் குரு எழில். என் மனைவி தான் அந்த அடையாளத்தால் ரொம்ப வருத்தப்படுகிறார். ஷூட்டிங்கில் நடிக்கும் நாங்கள் எவ்வளவு எக்ஸ்ட்ராவா பேசினாலும் அதை அனுமதிப்பார் இயக்குனர் எழில். அவருக்கு தெரியும் எதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று. உதயநிதி சின்சியரான நடிகர், நல்ல மனசுக்காரர். என் அப்பா இறந்தபோது பிரஸ்மீட்டை கூட கேன்சல் செய்து விட்டு எனக்காக மதுரை வரை வந்து என் அப்பாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். அந்த அளவு நட்புக்கு மரியாதை கொடுக்கக் கூடியவர். ரெஜினா பாடல் ஒன்ஸ் மோர் கேட்கும் வகையில் வந்திருக்கிறது. அதுவே 50 நாட்கள் வரை ஆடியன்ஸை தியேட்டருக்கு அழைத்து வரும் என்றார் நடிகர் சூரி.

இமான் ஒரு உணவுப்பிரியர். கம்போஸிங்குக்கு முன்பு அவருக்கு பிரியாணி ரெடி பண்ணிருவேன். இமானும், யுகபாரதியும் சேர்ந்துட்டாலே தன்னால சூப்பர் ஹிட் பாடல்கள் வந்து விடும். நம் முன்னோடி இயக்குனர்கள் எல்லோரும் மிகவும் திறமையானவர்கள், புத்திசாலிகள், அவர்களுடம் இணைந்து பணியாற்றுவது ஒரு சிறப்பான அனுபவம். இப்போது இருப்பவர்கள் சினிமா வரலாற்றை, நம் மூத்த இயக்குனர்களை பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். அது தவறு, மாற வேண்டும் என்றார் இயக்குனர் எழில்.

சிருஷ்டி என்ன சொன்னாலும் நம்புவார், கொச்சினை தாண்டி ஒரு கடற்கரையில் ஷூட்டிங் நடந்தபோது சிருஷ்டிக்கு கேரவன் கூட இல்லை. ஆனாலும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். எம்புட்டு இருக்குது ஆசை பாட்டை பத்தி எல்லோரும் பேசுனாங்க. அந்த பாட்டு அவ்ளோ பெரிய அளவு பேசப்படறதுக்கு முக்கிய காரணம் ரெஜினா தான். நான் மூணாவதா ஒப்பந்தமான படம் தான் சரவணன் இருக்க பயமேன். ஆனா முதல்ல ரிலீஸ் ஆகுது, அது தான் எழில் சாரின் வேகம். படம் பார்த்துட்டு நல்லா இருந்தா உடனே விமர்சனம் எழுதுங்க, இல்லைனா மூணு நாள் கழிச்சு எழுதுங்க என்றார் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.

விழாவில் நாயகிகள் ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, கவிஞர் யுகபாரதி, நடிகர்கள் ரோபோ சங்கர், கும்கி அஸ்வின், சுப்புராஜ், ராஜாசேகர், சாம்ஸ், நடிகைகள் ஜாங்கிரி மதுமிதா, ரிஷா ஆகியோரும் பேசினார்கள்.

Rhythm – of life Music Video Press Release

unnamed

Theme – When a soul searching Lost artist, who is caged in the memories of his past, sets on a travel to Kerala to find a muse for his music, comes across a Girl Biker who comes to the same place along with her biker friends. When they cross each other, they are shocked and are taken aback to the past. They both have a had a relationship in the past.

Is this a second chance?
Will memories become reality again?
Or is there a twist in the tale?
Have they become totally different persons in the course of time?
Did they manage to overcome the obstacles?

This forms the crux of the story.

Produced by – Shutterbug Entertainers

Written and Directed by – Sam Paul P

Music Composer – Vishal Chandrashekar (the composer of Inam, Jil Jung Juck, Kuttram 23, Simba,etc.)

Track title – Naan Raman Illai – a single track
Length – 5 minutes in audio , 7 minutes in video
Lyrics – Vishnu Edavan
Singers – Yazin Nizar, Kavya ajith
Mixed by Ramji Soma and Mastered by Andreas Balaskar in Germany.

VIDEO team
Actors – Ashwin Kumar Lakshmikanthan , Niranjanie Ravishankar
DOP – Goutham George ( PC Sreeram’s assistant. worked in I, Ok Kanmani and Shamitabh)
Edit – Suresh TS ( editor of Maya, Tamizh padam , Inam, Theeratha vilayaatu pillai, kadalil sothapuvathu eppadi, vanakkam chennai, etc.)
Art – Julian Arvind
Costume and Make up – Anusha Swamy and Uthra Lakshmi
DI – Balaji gopal ( Colorist of Kutrame Thandanai and Kaaka muttai)
SFX – Sachin Sudhakaran ( Sync Cinema ) ( The sound team of Maya, Maanagaram, etc.)

This video was shot in Fort Kochi, Kerala and in Kovalam, ECR, chennai. It was shot in Red Dragon and Red Epic camera.

This is a single track Independent music album which is released by Sony Music India. The worldwide online release date of this music video is on May 10, 2017.